வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (08:44 IST)

சுல்தான் படத்தில் பாராட்டு பெறும் யுவனின் பின்னணி இசை!

நேற்று வெளியான சுல்தான் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் யுவனின் பின்னணி இசை பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படம் நேற்று ரிலிஸானது.

கார்த்தி மற்றும் ராஷ்மிகாவுக்காக மிக நல்ல ஓபனிங் இருந்தாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையால் கடுப்பான ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை குறித்து பலரும் பாசிட்டிவான கருத்து தெரிவித்து வருகின்றனர். சுல்தான் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்திருந்த நிலையில் யுவன் பின்னணி இசை மட்டும் அமைத்திருந்தார்.