சுல்தான் படம் வெற்றி....இளம் நடிகர்களுக்கு நன்றி கூறிய கார்த்தி
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள சுல்தான் திரைப்படம் வெற்றி பெற இளம் நடிகர்கள் வாழ்த்தியதற்கு கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் இன்று காலை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் முதல் படமான ரெமோவின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் இந்த படம் ரெமோவை விட மிகப்பெரிய வெற்றியை உங்களுக்குத் தரட்டும். நடிகர் கார்த்திக்கும், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கும் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
இதற்கு நடிகர் கார்த்தி நன்றி சிவா எனத் டுவீட் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் சிபிராஜ், ம் விக்ரம் பிரபு ஆகிய இருவரும் நடிகர் கார்த்தி மற்றும் சுல்தான் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் எனப் பாராட்டியுள்ளனர். இவர்களுக்கும் நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாகியுள்ள சுல்தான் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.