1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (09:00 IST)

பாஸிட்டிவ் விமர்சனங்களை பெறும் கார்த்தியின் சுல்தான்!

நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள சுல்தான் திரைப்படம் சமூகவலைதளங்களில் பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் இன்று காலை வெளியாகியுள்ளது.

சில நகரங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்நிலையில் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்களைக் கூறி வருகின்றனர். இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.