வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (09:07 IST)

“சின்ன சறுக்கல்… தேச துரோகம் பண்ணுன மாறி..” நெல்சனுக்கு ஆதரவாக யுடியூபர் டிவீட்

சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அவரை கேலி செய்யும் மீம்கள் மற்றும் ட்ரோல்கள் பரவலாக உருவாக்கப்பட்டன. வழக்கமாக இதுபோன்ற ட்ரோல்கள் சில நாட்களில் முடிவுக்கு வரும். ஆனால் நெலன் விஷயத்தில் இப்போது வரை இணையத் தாக்குதல்கள் நடந்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்சனுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நெல்சன் நேத்து வந்து , இன்னைக்கு இயக்குனர் ஆகல. பதினஞ்சு வருசம் வேர்வை , இரத்தம் சிந்தி தான் இந்த இடம். ஒரு சின்ன சருக்கலுக்கு அவர் என்னமோ தேச துரோகம் பண்ணுன மாறி மீம்கள் . " வாழு, வாழவிடு" ன்னு புரோபைல்ல மட்டும் வச்சா போதுமாடா ? கொஞ்சம் நிஜ வாழ்க்கைலயும் கட புடிங்கடா !” என அறிவுரைக் கூறும் விதமாக பதிவிட்டுள்ளார்.

நெல்சன் தற்போது ரஜினியின் அடுத்த படத்துக்கான திரைக்கதை வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.