ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (22:31 IST)

பிரபல நடிகரின் டிரைலரை வெளியிட்ட விஜய்சேதுபதி !

vijay sethupathy
அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள படம்  வேழம்.

தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவன், பீட்சா2 உள்ளிட்ட படங்களில்  கதா நாயகனாக நடித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் வேழம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சந்தீப் ஸ்யாம் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் மற்றும்  ஜனனி ஆகியோர் நடித்துள்ள படம் வேழம். இவர்களுடன் இணைந்து, அஜய், ராஜா கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் ஜர்னலில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்த  நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் இன்று படக்குழு அறிவித்தது.

அதன்படி, ஜூன் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அசோக் செல்வன் நடிப்பில் த்ரில்லர் ஜர்னரில் உருவாகியுள்ள  வேழம் படத்தின் டீஸரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.