பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார் – கோட் பாடல்கள் குறித்து வெங்கட்பிரபு!
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் கோட் படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை சென்று சந்தித்தனர். இந்த படம் இரண்டாவது முறையாக மீண்டும் செய்யப்பட்டு மூன்று மணிநேரம் 3 நிமிடம் ஓடும் அளவுக்கு வெட்டப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் வெங்கட்பிரபு “யுவன் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கிறார். அதனால் அவருக்குக் கூடுதல் அழுத்தம் உள்ளது. அனிருத் சமீபகாலமாக விஜய் படங்களில் மிகச்சிறப்பான பாடல்களைக் கொடுத்துள்ளார். அவர் செய்ததையே யுவனும் செய்யமாட்டார். ஆனால் நீங்கள் கோட் படம் பார்த்தால் கண்டிப்பாக அந்த பாடல்கள் உங்களுக்குப் பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.