புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:06 IST)

மிஷ்கினின் ட்ரைன் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்துக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகையாக இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன். படத்தில் ஒரு பாடலை பாடவந்த அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரே நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் அந்த கதாபாத்திரத்தில் பாவனா நடிக்க இருந்ததாகவும் அவர் பிஸியாக இருந்ததால் ஸ்ருதிஹாசன் நடித்ததாகவும் இயக்குனர் மிஸ்கின் கூறியுள்ளார்.