1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2017 (16:41 IST)

பழையன கழிந்தே தீர வேண்டும் புதியன புகுந்தே ஆக வேண்டும்; பிக்பாஸ் ப்ரொமோ!

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு, ரசிகர்கள் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை அரிய ஆவலாக இருக்கின்றனர். பலர் காயத்ரி தான் வெளியேற வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

 
காயத்ரியால் பிக்பாஸ் வீட்டில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் அதிக கெட்ட வார்த்தைகளை பேசுவது என இவரின் செயல்கள் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.  புதுமுகங்கள் வீட்டிற்குள் வந்திருப்பதால் இந்த வாரம் சுமூகமாக சென்றிருக்கிறது. 
 
இந்த நிலையில் தற்போது வந்த புதிய புரொமோவில் கமல்ஹாசன் பழையன கழிந்தே தீர வேண்டும், புதியன புகுந்தே ஆக  வேண்டும் என்று கூறுகிறார். 
 
இதனை தொடர்ந்து  காயத்ரி எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் உண்மை இல்லை போட்டோ ஷாப் செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை.