1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (16:38 IST)

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடி திருப்பமாய் அடுத்தடுத்து நுழைந்த மூன்று பிரபலங்கள்!

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக, இரண்டு பிரபலங்கள் நுழைந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வரவாக ஆட்டோவில் ஒரு பெண் வந்து இறங்கியுள்ளார்.

 
பிக்பாஸ் வீட்டில் புது வரவாக நேற்று முன் தினம் சுஜா வருணி, நேற்று நடிகர் ஹரிஷ் கல்யாண், இன்று காஜல் பசுபதி என பிக்பாஸ் வீட்டில் மூன்று புதிய பிரபலங்களை அனுப்பியுள்ளார் பிக்பாஸ்.
 
இந்த வாரம் நுழைந்துள்ள மூன்று பிரபலங்களும் கமல்ஹாசனை சந்திக்காமல் நேரடியாகவே வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள்.  சுஜா வருணி கிரேன் மூலம் வந்திரங்கினார். ஹரிஷ் கல்யாண் சுவர் மீது ஏறிக் குதித்து வீட்டிற்க்குள் நுழைந்தார். இந்நிலையில்  தற்போது காஜல் பசுபதி ஆட்டோ மூலம் உள்ளே சென்றுள்ளார்.
 
ஓவியா இனி பிக்பாஸ் வீட்டில் திரும்ப மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் இந்த வார எவிக்ஷனில் காயத்ரி, ரைசா பெயர்  உள்ள நிலையில், காயத்ரி வெளியேறவே அதிக பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் இன்று வெளியிட்ட காஜல் பசுபதி தொடர்பான ப்ரொமோவை வெளியிட்ட விஜய் டிவி சற்றுநேரத்திலேயே அதை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டு மறுபடியும் வெளியிட்டுள்ளது.