திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (16:37 IST)

அண்டை மாநிலங்களில் வெளியாகும் பரியேறும் பெருமாள்

சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் பரியேறும் பெருமாள் விரைவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கிய பண்பாட்டு தளங்களில் இயங்கி வரும் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இப்படத்தினை இயக்குனர் ராம்மிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். கதிர், ஆனந்தி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்துக்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

செப்டம்பர் 28-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் போதுமான அளவுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால் நேற்று முதல் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது இப்படத்தினை ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளியிடப்போவதாக நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.