1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:13 IST)

கண்ணே கலைமானேப் படத்தின் பாடல் வரிகள்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் கண்ணே கலைமானே திரைப்படத்தில் வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடலின் வரிகளை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

தர்மதுரை படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சீனு ராமசமி உதயநிதி ஸ்டாலினைக் கதாநாயகனாக வைத்து கண்ணே கலைமானேப் படத்தை இயக்கி வருகிறார். தர்மதுரையின் இசைக்கூட்டணிக்குப் பரவலான பாராட்டுகளோடு தேசிய விருதும் கிடைத்ததால் இந்த படத்திலும் யுவன் ஷங்கர் ராஜா-வைரமுத்து கூட்டணியே பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது.

விவசாயப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. தற்போது அதற்கு முன்னோட்டமாக  இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடகர் சூரஜ் பாடியுள்ள ஒரு பாடலின் வரிகளை இயக்குனர் சீனுராமசாமி தந்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல்லவி
எந்தன் கண்களைக் காணோம்
அவள் கண்களில் கண்களைத்
தொலைத்தேனோ?
எந்தன் கண்களைக் காணோம்
அவள் கண்களில் இனி நான்
விழிப்பேனோ?

சரணம்
நேரில் வந்தாள் – ஏன் என்
நெஞ்சில் வந்தாள்? – உயிர்க்
கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக் கொண்டாள்
எவ்வாறு மறப்பது – உயிர்
மரிப்பது நன்று

காதல் என்ற
கெட்ட வார்த்தை என்றால்?
இந்த கலகப்பூச்சிகள்
பிறப்பது ஏது
சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால்?
பட்சி விலங்கு ஜாதிக்கு
ஜாதகம் ஏது?

கல்யாணம் தானே
காதலின் எதிரி என்றால்?
கல்யாணம் தேவையா?