திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (15:43 IST)

யோகிபாபு – ஓவியா பட ஷூட்டிங் தொடக்கம்!

நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ள காண்ட்ராக்டர் நேசமணி என்ற படத்தை அன்கா மீடியா தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மதயானை, களவாணி, உள்ளிட்ட படங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா நடிக்கவுள்ளார்.  இப்படத்திற்கு தர்மபிரகாஷ்  இசையமைக்கவுள்ளார். இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தின் பூஜை வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதுகுறித்து நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஓவியா, யோகிபாபு இணைந்து நடிக்கும் காண்ட்ராக்டர் நேசமணி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் பார்த்திபன நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில்  இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.   இப்படத்தின் பூஜை விழாவில் படக்குழுவினர் மற்றும்  தயாரிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.