செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (19:34 IST)

காண்ட்ராக்டர் நேசமணி: ஓவியாவின் அடுத்த பட டைட்டில்!

காண்ட்ராக்டர் நேசமணி: ஓவியாவின் அடுத்த பட டைட்டில்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க ஓவியா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு கான்ட்ராக்டர் நேசமணி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது யோகிபாபுவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறாரா அல்லது முக்கிய கேரக்டரில் இருவரும் நடிக்கிறார்களா என்பது போகப்போகத்தான் தெரியவரும் 
 
இந்த படத்தை ஸ்வதீஷ் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் தர்ம பிரகாஷ் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இவ்வாண்டு இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது