வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (12:29 IST)

எனக்கு இந்த நம்பர்தான் வேணும்! அடம்பிடித்த என்.டி.ஆர்! – 17 லட்சம் செலவு!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது காருக்கு பேன்சி நம்பர் வாங்க ரூ.17 லட்சம் செலவு செய்தது வைரலாகியுள்ளது.

தெலுங்கில் பிரபலமான ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்து வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ராம்சரணும் சேர்ந்து நடித்துள்ளனட். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் சுதந்திர போராட்ட வீரரான கோமரம் பீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் 3 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரை ரெஜிஸ்டர் செய்தபோது தனக்கு பிடித்த பேன்சி எண்ணான 9999 என்ற எண் தனக்கு வேண்டும் என பிடிவாதமாக இருந்த ஜூனியர் என்.டி.ஆர் இதற்காக ரூ.17 லட்சம் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.