அமீர்கானோடு நடிக்கும் யோகிபாபு – கலக்கலான பாலிவுட் அறிமுகம் !

Last Modified சனி, 14 செப்டம்பர் 2019 (10:44 IST)
தமிழில் நகைச்சுவையில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கிக் கொண்டு இருக்கும் யோகி பாபு பாலிவுட்டில் அமீர்கானோடு நடிக்க இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் நடித்த யோகி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த யோகி பாபு இப்போது தமிழ் சினிமாவின் காமெடிக் கதாபாத்திரங்களில் கோலோச்சி கொண்டிருக்கிறார். உச்ச நட்சத்திரங்களான ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் இப்போது பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்போது ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப்பை ரீமெக் செய்து நடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் அவரோடு தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையி இப்போது மற்றொரு முக்கியமான வேடத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 இதில் மேலும் படிக்கவும் :