வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (11:28 IST)

பிறந்தநாளில் மகனுக்கு பெயர் சூட்டிய யோகிபாபு!

நடிகர் யோகி பாபு தனது மகனுக்கு விசாகன் என்று பெயர் வைத்துள்ளார்.

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் நடித்தவர் பாபு. இதன் பின்னர் யோகி பாபு என அழைப்படுகிறார். இவர், அரண்மனை, பெரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகான  யோகிபாபு, நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் விஜய்65 உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளில் மகனுக்கு விசாகன் எனப் பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயருக்கு முருகனின் பல்வெறு பெயர்கள் அர்த்தம் உண்டு என சொல்லப்படுகிறது.