கொரோனாவால் இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 23 ஜூலை 2021 (10:01 IST)
கொரோனா பாதிப்பால் இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் மக்களவையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இதுவரை ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரிந்த 3,573 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
 
உயிரிழந்த  நிரந்தரப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், தற்காலிக பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ 90,000 அல்லது இரண்டு மாத ஊதியமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 


இதில் மேலும் படிக்கவும் :