திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (10:47 IST)

100 படங்களை முடித்த படத்தொகுப்பாளர்… மாநாடு சர்ப்ரைஸ் அப்டேட்!

மாநாடு படத்தின் மூலம் தன்னுடைய 100 ஆவது படத்தை முடித்துள்ளார் எடிட்டர் கே எல் பிரவீன்.

சென்னை 28 மூலமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் எடிட்டர் கே எல் பிரவின். அதன் பின்னர் அவர் பிஸியான் எடிட்டராக வலம் வர ஆரண்யகாண்டம் படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில் இப்போது அவர் தனது 100 ஆவது படமான மாநாடு படத்தை முடித்துள்ளாராம். தன்னை அறிமுகப்படுத்திய வெங்கட்பிரபுவின் படமே அவருக்கு 100 ஆவது படமாக அமைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.