1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (19:56 IST)

சத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி: அலறிய யோகி பாபு

'யோகி' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான யோகி பாபு தன் திறமையால் முன்னணி காமெடியனாக உயர்ந்தார்.

 
'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
 
இதனை மறுத்து வீடியோ ஒன்று வெளியிட்ட யோகிபாபு, அந்த படத்தில் படம் முழுக்க வரும் காமெடியனாக நடிக்கிறேன் என்றார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், 'வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய் ஒன்றுக்கும் நடக்கும் கதை தான் படம். இந்த படத்தில் நான் கூர்கா வேடத்தில் நடிக்கிறேன்.
 
எனக்கு ஹீரோவாக நடிக்க ஆசையில்லை. கடைசி வரைக்கும் காமெடியனாகத்தான் நடிப்பேன். இது ஹீரோ மூஞ்சி இல்லை, காமெடி மூஞ்சி. 
 
நான் ஹீரோவாக நடிக்கிறேன் என யாரோ தவறான தகவல் பரப்பியுள்ளனர். இதனால் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். சத்தியமாக சொல்கிறேன் இது காமெடி மூஞ்சி" என்றார் யோகி பாபு.