செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (10:09 IST)

”கதையா… அதெல்லாம் அப்புறம்… மொதல்ல சம்பளம்..” தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் யோகி பாபு!

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து அவரை வைத்து சிறு பட்ஜெட்டில் படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் யோகி பாபு இப்படி அணுக வரும் தயாரிப்பாளர்களிடம் கதைப் பற்றி எதுவும் பேசாமல் முதலில் சம்பளம் என்று ஒரு பெரிய தொகையை சொல்லி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறாராம்.