வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (10:03 IST)

விஜய் பட இயக்குனர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’… வெளியான முதல் லுக் போஸ்டர்!

விஜய்யின் சுறா படத்தை இயக்கியவர் எஸ் பி ராஜ்குமார். அவர் இயக்கத்தில் இப்போது யோகி பாபு மற்றும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு காமெடி டிராக் எழுதியவர் எஸ் பி ராஜ்குமார். வடிவேலு மற்றும் கவுண்டமணி ஆகியோருக்கு பல படங்களில் எழுதியுள்ள அவர் பொன்மனம் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார். அதில் முக்கியமாக விஜய்யின் 50 ஆவது படமான சுறா படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அழகர்மலை படத்தை இயக்கினார். அந்த படமும் ஹிட்டாகவில்லை.

இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நடன இயக்குனர் தினேஷ் மற்றும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லோக்கல் சரக்கு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.