யோகி பாபுவின் தர்மபிரபு ரிலிஸ் – கல்லா கட்டிய தயாரிப்பாளர் !

Last Modified வெள்ளி, 28 ஜூன் 2019 (09:53 IST)
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ள யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தர்மபிரபு படத்தின் மூலம் கல்லா கட்டியுள்ளார் அதன் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் தற்போதைய சூழ்நிலையில் காமெடியில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. எமதர்மன் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ராதா ரவி, அழகம்பெருமாள், மனோபாலா, ரேகா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார்.

யோகி பாபு சம்பளம் உட்பட 8 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம்  சுமார் 12 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளர் டேபிள் புராபிட்டாக 4 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :