துப்பாக்கியால் சுட்ட இளைஞன், சரிந்து விழுந்த சன்னி லியோனி !!!

Last Updated: வியாழன், 27 ஜூன் 2019 (19:34 IST)
படப்பிடிப்பின் போது கீழே சரிந்து விழுந்த சன்னி லியோனி, மயக்க நிலையில் சுய நினைவின்றி கிடந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சன்னிலியோனி தற்போது நடித்து வரும் ”கோக்கொக்கோலா” திரைப்படத்தின் படபிடிப்பு சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்..

அந்த வீடியோவில் துப்பாக்கியால் சுட்ட பிறகு, கிழே விழுகிறார் சன்னி லியோன். பின்பு திரைப்பட குழுவினர் அனைவரும் ”ஷாட்” முடிந்துவிட்டது என சன்னி லியோனியை எழுப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் சன்னி லியோனி எழுந்திருக்கவே இல்லை.


அத்துடன் வீடியோ முடிகிறது. அந்த வீடியோ முடியும் தருவாயில், ‘இதற்கு மேல் என்ன நடந்தது என்பதை நாங்கள் காண்பிக்க விரும்பவில்லை” என திரை முன் வருகிறது. மேலும் அதற்கு கீழே ”கிராபிக்ஸ் வார்னிங்” என்ற எச்சரிக்கையும் விடப்படுகிறது.

தற்போது இந்த வீடியோவை சன்னி லியோனின் “இன்ஸ்டா” பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “நாங்கள் இந்த வீடியோவை சன்னிலியோனின் பக்கத்தில் பகிர்ந்துள்ளோம்,இந்த வீடியோ மூலம் நேற்று இரவு என்ன நடந்தது என்று உலகத்துக்கு தெரியவரும் என பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், சன்னி லியோனி ரசிகர்கள், “சன்னிக்கு என்ன ஆயிற்று?” “சன்னி இப்போது எப்படி இருக்கிறார்?” என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் சிலர், இது “கோக்கொக்கோலா” திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :