ரிலீசுக்கு சில மணி நேரம் முன் நல்ல செய்தியை பெற்ற 'எமன்'

sivalingam| Last Updated: வியாழன், 23 பிப்ரவரி 2017 (22:54 IST)
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம்
ஏற்கனவே கடந்த ஆண்டு 'பிச்சைக்காரன்', 'சைத்தான்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி இம்முறை லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள 'எமன்' திரைபடத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை கிடைத்துள்ளது. இந்த தகவல் படக்குழுவினர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும் இனிப்பான ஒரு செய்தியாக உள்ளது.

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நான்', அமரகாவியம்' போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :