வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (12:44 IST)

நீ என்னை மன்னிக்கமாட்டல பவனி..? தோழி இறந்தது தெரிந்து யாஷிகா முதல் பதிவு!

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டது. மேலும் தொடர் சிகிசிச்சையில் இருந்து வரும் யாஷிகாவிடம் தோழி இறந்த சம்பவத்தை சொல்லவில்லை. 
 
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்ட யாஷிகா தோழி இறந்தது தெரிந்து dp'யை நீக்கிவிட்டு முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், " இப்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை. உயிரோடு இருப்பதே என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது.
 
ஒரு மோசமான விபத்திலிருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய உயிர்த்தோழியை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் பவணி. நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்று எனக்கு தெரியும். என்னை மன்னித்து விடு. 

ஒரு மோசமான நிலையை உன் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி விட்டேன். உன்னுடைய ஆத்மா அமைதி அடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒருநாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நம்முடைய நினைவுகளை நான் என்றென்றும் பாதுகாப்பேன். நான் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அவருடைய குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள். ஐ மிஸ் யூ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.