1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:35 IST)

தூத்துக்குடியின் துணை ஆட்சியர் - பிரபல நடிகரின் மகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவர் சின்னி ஜெயந்த். 30 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் உள்ள இவர் இதுவரை 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார். அப்போது பேட்டி ஒன்றில், பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறியிருந்த ஸ்ருதன் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் உதவி ஆட்சியர் பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பாவுக்கு பெருமை சேர்ந்த ஸ்ருதனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.