1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (12:35 IST)

பிக் பாஸில் பங்கேற்க அழைப்பு வந்தது… நான் தான் போகவில்லை

பிக் பாஸில் பங்கேற்க அழைப்பு வந்தும், தான் போகவில்லை எனத் தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.



 
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், பயந்துபோய் இவர் மறுத்துள்ளார்.

தற்போது அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு கிடைத்திருக்கும் புகழைப் பார்த்து, கலந்து கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் போல… “எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு என்பது நிச்சயம் கிடைக்கும். எனக்கும் அப்படிக் கிடைத்தால், அடுத்த சீஸனில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.