வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:52 IST)

KGF 3 உருவாகுமா? “சில ஐடியா பேசுணோம்… ஆனா”…. யாஷ் சொன்ன பதில்!

சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என இப்போதே பலரும் காத்திருக்கிறார்கள். தற்போது கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாலெ நிறுவனம் நாளை மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அது மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பாய் இருக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக படத்தின் தயாரிப்பாளரும் முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறியிருந்தார்.

இது சம்மந்தமாக சமீபத்தில் பேசியுள்ள நடிகர் யாஷ் “கேஜிஎஃப் 2வில் சொல்ல முடியாத சில விஷயங்களை மூன்றாம் பாகத்தில் சொல்லலாம் என சில ஐடியாக்களை யோசித்தோம். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டோம்” எனக் கூறியுள்ளார். இதனால் கேஜிஎஃப் 3 உருவாகுமா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.