1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:10 IST)

கோடியில் புரளும் வசூல்... 3 நாட்களில் யாத்திசை படம் செய்த சாதனை!

இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கியுள்ள யாத்திசை படத்தின் ட்ரெய்லர் பா.ரஞ்சித், மோகன் ஜி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல பிரபலங்களால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த யாத்திசை படம் ‘பொ.செ-2’ க்கு முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 
 
சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் மோதிக்கொண்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை இது பீட் செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கதையாக்கம் மற்றும் மேக்கிங்கில் படக்குழு மிரட்டியுள்ளது.
 
இந்நிலையில் இப்படம் வெளியாகி வெறும் 3 நாட்களிலே ரூ. 1.37 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கூறுகிறது. இது அப்படத்தின் மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.