வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2023 (15:20 IST)

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை ...ரசிகர்கள் அதிர்ச்சி

sambath j ram
பிரபல கன்னட சினிமா மற்றும்  சின்னத்திரை நடிகர்  சம்பத் ஜே ராம்,. நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகர் சம்பத் ஜே ராம். இவரது நடிப்பில், ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டுடிரோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் நடிப்பில் ஒளிபரப்பான அக்னி சாக்ஷி என்ற தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

35 வயதாகும்  நடிகர் சம்பத் ஜே ராமிற்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நாட்களாக மனவுளைச்சலில் இருந்ததாகவும்,  தன் தொழிலில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததாலும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று  நீலமங்கலா என்ற பகுதியிலுள்ள தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை கலைஞர்கள்  ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.