1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Actress kiran latest stunning photoshoot pics

கம்பேக் கொடுத்த கிரண்… இன்ஸ்டாவில் வரிசையாக இறக்கிய புகைப்படங்கள்!

Kiran Rathod
தமிழ் சினிமாவில் 2000ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். 

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் ரதோட் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. 

அடுத்த கட்டுரையில்
பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை ...ரசிகர்கள் அதிர்ச்சி