1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (14:19 IST)

அருண் விஜய் நடிக்கும் ‘யானை’…. வெளியானது புதிய கிளிம்ப்ஸ்!

அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார். இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது.

ஆனால் ஜூன் 17 ல் இருந்து மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்ததால் ரிலீஸ் ஜூலை 1 க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் யானை படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ரிலீஸூக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது ‘யானை’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.