லிங்குசாமியின் ‘தி வாரியர்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி வாரியர்
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
தி வாரியர் திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 1ஆம் தேதி இரவு 7.57 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ஜூலை 14-ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் ஆதி வில்லனாக நடித்துள்ளார் என்பதும் மற்றொரு முக்கிய கேரக்டரில் நதியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.