செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (19:04 IST)

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vendhu
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
வே;ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு
 
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே சிம்புவின் ‘மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது