திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:16 IST)

அஜித் வீட்டு முன் தற்கொலைக்கு முயன்ற பெண்… போலிஸார் கைது!

அஜித் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மருத்துவமனைக்கு சென்ற போது அவரை வீடியோ எடுத்த பெண் அதை சமுகவலைதளத்தில் பரப்பினார்.

இது சம்மந்தமாக அந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியது. இது சம்மந்தமாக அவர் அஜித்தை சந்தித்து மன்னிப்புக் கேட்டு வேலைக்கு சேரவேண்டும் என முயற்சி செய்தார். அஜித்தை சந்திக்க முடியவில்லை. ஆனால் அவர் சார்ந்தவர்களின் முயற்சியால் மீண்டும்  வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் சில மாதங்களிலேயே அவர் மீண்டும் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இம்முறை அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால் அஜித் விவகாரத்தால்தான் தனக்கு வேலை போனதாக அந்த பெண் சொல்லி வந்தார். இது சம்மந்தமாக அவர் இப்போது அஜித் வீட்டுக்கு முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் அவரைத் தடுத்து கைது செய்துள்ளனர்.