1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:08 IST)

நிறுத்தப்பட்ட அட்லி படத்தின் ஷூட்டிங்! ஏன் தெரியுமா?

அட்லி இப்போது ஷாருக் கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது.  படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை அட்லி மும்பையில் தொடங்கியுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் உபயோகித்ததாக கைது செய்யப்பட்டதில் ஷாருக் கான் மன உளைச்சலில் உள்ளாராம். இதனால் படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.