புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (09:45 IST)

உண்மையை சொல்லி வியாபாரம் செய்யும் மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நான்கு நாட்கள் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அது ஒரு முக்கியமானக் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. ஆனாலும் அந்த கதாபாத்திரம் சுமார் 16 நிமிடம் மட்டுமே படத்தில் வருமாம். அந்த உண்மையை விநியோகஸ்தர்களிடம் சொல்லியே மிஷ்கினும் தயாரிப்பாளரும் பிஸ்னஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்களாம். சமீபகாலமாக விஜய் சேதுபதி நடித்த அனபெல் சேதுபதி உள்ளிட்ட சில படங்களை விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தது போல ஏமாற்றி வியாபாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.