1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (21:33 IST)

பிரபல தயாரிப்பாளருடன் முன்னணி நடிகை காதல்..??

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். இப்படத்தில்  அவருக்கு ஜோடியாக நடித்தவர் அனு இம்மானுவேல் சித்தார்த். இவர் தற்போது சர்வானந்த் நடிப்பில் உருவாகிவரும் மகாசமுத்திரம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரைக் குறித்த ஒரு தகவல் வெளியாகிறது. அதில்,கடந்த சில மாதங்களாகவே மகாசமுத்திரம் படத் தயாரிப்பாளர் ஜோதிகிருஷ்ணாவை காதலிப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் அவருடன் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

தற்போது, அவர் வேறொரு தொழிலதிபருடன் டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் அனு பிசியாக  நடித்து வருகிறார்.