வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (14:22 IST)

அழகில் மகாராணியை தோற்கடித்த பிரியா பவானி ஷங்கர் - ராயல் போட்டோ ஷூட்!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். 
 
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜய் உடன் மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் அவ்வப்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது மகாராணி போன்று அழகிய உடை அணிந்து ராஜஸ்தானி ஸ்டைலில் மூக்கில் லோலாக்கு மாட்டிக்கொண்டு ராயல் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.