திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (12:33 IST)

யூடியூப் டேரண்டிங்கில் சமுத்திரக்கனியின் "ரைட்டர்" டீசர்!

யூடியூப் டேரண்டிங்கில் சமுத்திரக்கனியின் "ரைட்டர்" டீசர்!
 
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷங்களில் ஒருவர் நடிகர் சமுத்திரக்கனி. திரைப்படங்களில் அவரது நடிப்பு தனித்துவப்படுத்தி பேசப்படும். சமூக அக்கறை சார்ந்த திரைப்படங்களில் தோன்றி மக்கள் மனதில் நல்ல நடிகனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 
 
அந்த லிஸ்டில் தற்போது  பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் "ரைட்டர்" என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் , கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் மற்றும் ஜெட்டி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து இப்படத்தை வழங்குகிறது. 
 
இதில் காவல் துறை அதிகாரியாக நடிக்கும் சமுத்திரக்கனியுடன் திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற டிசம்பர் 24ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இத்திரைப்படத்தின் விறுவிறுப்பான டீசர் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதோ அந்த வீடியோ...