செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 8 ஜூலை 2023 (15:03 IST)

லியோ பட முதல் சிங்கில் '' நா ரெடி தான்'' பாடலுக்கு சிக்கல்? வெளியாகும் தகவல்

விஜய்யின் லியோ படத்தின் முதல் சிங்கில் ‘’நா ரெடிதான் வரவா’’  என்ற பாடல் படத்தில் இடம்பெறாது என தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல் வெளியானது.

அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், இப்பாடல் காட்சியிலும், போஸ்டரிலும் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு விமர்சனம் வலுத்தது. சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்.

இளைஞர்களை மதுகுடிக்கவும், புகைப்பிடிக்கவும் தூண்டுவதா? என்று  நடிகர் விஜய்க்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் '' லியோ பட முதல் சிங்கில் ''நா ரெடி''  பாடல்  இளைஞர்களை போதைப் பழக்கத்தை தூண்டும் வகையிலும் ரவுடியிசத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் விஜய் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று'' சென்னை காவல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதையடுத்து,   அனைத்து மக்கள் அரசியல்  கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா  நடிகர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதில்,

" பாட்டிலில் பத்தாது நான் குடிக்க அண்டாவில் கொண்டு வா சியர்ஸ் அடிக்க"
"பத்த வச்சு புகைய இழுத்தா பவர் கிக்"
"விரலுக்கு இடையில் தீபந்தம் நான் ஏத்தட்டா"
"மில்லி உள்ள போனா கில்லி வெளியே வருவாண்டா"
"புகையிலை பவர் கிக்கு"

போன்ற வரிகளை எழுதிய அசல் கோளாறு மற்றும் பாடலை பாடிய நடிகர் விஜய் அவர்களுக்கு சமூகத்தைப் பற்றிய சிந்தனை இல்லை என்பதனை குறிப்பிட்டு இருந்தேன்.

மேலும் இந்தப் பாடலை பார்த்து ஒரு இளைஞனோ அல்லது ஒரு மாணவனோ பாதிக்கப்பட்டால் அதற்கு நடிகர் விஜய் அவர்களோ அல்லது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களோ பொறுப்பு ஏற்பார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்புகார் கொடுத்த பின்னர், தன் டுவிட்டர் பக்கத்தில், ''இன்று காவல் துறை தலைமை இயக்குனர் திரு சங்கர் ஜிவால் அவர்களை நேரடியாக சந்தித்து நடிகர் விஜய் அவர்களை கைது செய்ய கோரி புகார் செய்யபட்டது'' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், , விஜய்யின் லியோ பட முதல் சிங்கில் பாடலான ‘’நா ரெடிதான் வரவா’’  என்ற பாடலுக்கு தணிக்கை பெறாத காரணத்தால்  இப்பாடல் படத்தில் இடம்பெறாது என தகவல் வெளியாகிறது.