1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:55 IST)

கே ஜி எஃப் மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டமா? ஹோம்பாலே பிலிம்ஸின் லேட்டஸ்ட் அப்டேட்!

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முடிவில், மூன்றாம் பாகத்துக்கான இணைப்பு ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகம் வெளியாகி 1 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, படத்தின் முக்கியத் தருணங்களை வெளியிட்டு, மூன்றாம் பாகம் பற்றிய நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்.