வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:47 IST)

கே.ஜி.எஃப் பட நடிகை மருத்துவமனையில் அனுமதி!

malaika avinash
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மாளவிகா அவினாஷ். இவர், மாதவன் நடித்த ஜே ஜே, கே.ஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்-2 உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் அவர் தன்மியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளப் பக்கத்தில், உங்களுக்கு ஒற்றைத்தலைவலி இருந்தால் அதை சாதாரணமாக எண்ண வேண்டாம். இல்லையெனில் நீங்கள் என்னைப் போல் மருத்துவமனை படுக்கையில்  இருக்க வேண்டியதிருக்கும். இந்த ஒற்றைத்தலை பிரரச்சனை தீர, பாரம்பரிய மருத்துவத்துடன் பனடோல்,   நெப்ரோசிம் ஆகிய மருத்துகள் எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.