இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி… பெரும் நம்பிக்கையில் தமிழ் சினிமா!
கோவிட் 19 பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாவும் ஒன்று. மூன்று அலைகளிலும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோன ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒன்றாக திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகள், இரவுக் காட்சிகள் ரத்து மற்றும் ஞாயிறு ஊரடங்கு ஆகியவற்றால் பல பெரிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைத்தன.
பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த பெரிய படங்கள் ஒத்திப் போனதால் இந்திய சினிமாவுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் இப்போது திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வலிமை, ஆர் ஆர் ஆர், கேஜிஎப் 2, பீஸ்ட் ஆகிய படங்கள் வரிசையாக ரிலிஸ் ஆக உள்ளதால் திரையுலகுப் புத்துணர்ச்சி பெறும் என்று நம்பப் படுகிறது.