வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (23:15 IST)

சூர்யாவின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இன்று அவர் தனது பிறந்தநாள் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள்  இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

நேற்று மாலை, பாண்டிராஜ் இயகக்த்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  சூர்யா நடித்துவரும் சூர்யா40 படத்தின் தலைப்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் எனப் பெயரிட்டுள்ளனர்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா40 படத்தில் நடித்து வரும் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

அதேபோல் ஞானவேல்ராஜா இயக்கத்தில் சூர்யா வக்கீலாக நடித்துவரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியானது. இப்படத்திற்கு பீம்ஜி எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சூர்யா தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ஜெய்பீம் பட போஸ்டர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தி மொழியில் மட்டும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டால் இது பான் இந்தியா படமாக வெளியாக வாய்ப்புள்ளது எனவும்கூறுகின்றனர்.

ஏற்கனவே சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் ஓடிடியில் வெளியான நிலையில், ஜெய்பீம் படமும் ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில்தான் ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது.