1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (20:12 IST)

’எதற்கும் துணிந்தவன்’: இதே டைட்டிலில் சூர்யா அப்பா சிவகுமார் நடித்த படம்!

எதற்கும் துணிந்தவன்’: இதே டைட்டிலில் சூர்யா அப்பா சிவகுமார் நடித்த படம்!
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் திரைப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த டைட்டில் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் என்ற டைட்டிலில் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் கடந்த 1977ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
இந்த படம் ஒரு கெளபாய் டைப் ஆக்சன் படம் என்றும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் கூறப்படுகிறது/ சூர்யா முதன்முதலாக தனது தந்தை நடித்த படத்தின் டைட்டிலில் தற்போது நடித்து வருகிறார் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாக பார்க்கப்படுகிறது.