திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:51 IST)

மார்க்கெட் போன நடிகர்… அதனால் சம்பளத்தை ஏகத்துக்கு உயர்த்திய நயன் – படக்குழு அதிரடி முடிவு!

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதால் படக்குழு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

பிரசாந்துக்கு மார்க்கெட் இல்லாததால் இந்த படத்துக்கு ஒரு அடையாளம் வேண்டும் என நினைத்த இயக்குனர் கதாநாயகி கதாபாத்திரத்துக்கு நயன்தாராவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ சம்பளமாக 6.5 கோடி கேட்டுள்ளார். இது படத்தின் பட்ஜெட்டுக்கு நிகராக இருப்பதால் அவரை நீக்கிவிட்டு இப்போது வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.