புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (18:43 IST)

கார்த்திக் ராஜூ - பிக்பாஸ் ரைசா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தினேஷ் நடித்த ’திருடன் போலீஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜூ, தற்போது நடித்து முடித்துள்ள ’சூர்ப்பநகை’ என்ற படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார் 
 
இந்த நிலையில் கார்த்திக் ராஜு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர் 
 
பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தமிழில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திரைப்படத்திற்கு ’தி சேஸ்’ என்று டைட்டில் அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டுள்ளது என்பதும், டைட்டில் போஸ்டரே அட்டகாசமாக படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் கூறியுள்ளார்