வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (22:30 IST)

ரஜினி கெட்டப்பில் சிம்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சினிமா திரையுலகில் பலர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். சிம்பு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. தான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமை கொள்பவர்  சிம்பு. 
இந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு, அந்த நிகழ்ச்சிக்கு அவர் காலா படத்தில் வரும் ரஜினியின் கெட்டப்பில் வந்து ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு சிம்பு வந்ததை பார்த்த ரசிகர்கள் கைகளை தட்டியும், கரகோஷமிட்டும் அவரை வரவேற்றனர். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், காலா கெட்டப்பில் ரஜினியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிம்புவின் புகைப்படத்தையும் ஷேர் செய்தும் வருகின்றனர்.
 
நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்று கூறி வரும் சிம்புவை காலா கெட்டப்பில் பார்த்த தலைவர் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிம்புவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஷேர் செய்தும் வருகின்றனர்.