வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (23:15 IST)

ரஜினி-லோகேஷ் பட அப்டேட்...ஷூட்டிங் எப்போது தொடக்கம்?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் தற்போது  ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.
 
இந்த நிலையில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியவரும் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ்,  அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
 
இதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ரஜினி- 171 பட போஸ்டர் ரிலீஸானது. இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
 
இந்த போஸ்டர் பற்றி பலரும் பல வித கதைகள் கூறி வரும் நிலையில், இதில், ரஜினி ஓய்வுபெற்ற காவல் அதிகாரி எனவும் தகவல் வெளியாகிறது
 
இந்த நிலையில், ரஜினி 171 படம் வரும் ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில் வரும் மே மாதம் 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் ரஜினி171 பட ஷூட்டிங் தொடங்குகிறதாம்.அதாவது சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் செட் போடப்பட்டு படமாக்கப்ட உள்ளனராம். 30 நாட்கள் இங்கு ஷூட்டிங் நடக்கும் என கூறப்படுகிறது.
 
அதேபோல் வரும் 22 ஆம் தேதிவரவுள்ள ரஜினி171 பட டீசருக்கான செட் விஜிவி-ல் 8 ஆம் தேதி முதல் போடப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.